பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

151


புராணக் கதைகளையும்; மக்களின் மூட நம்பிக்கைகளையும் இளம் வயதிலிருந்தே எதிர்த்து வந்தவர் பெரியார் -

1953 ஆம் ஆண்டு பிள்ளையார் விக்கிரக உடைப்புப் போராட்டத்தை நடத்தினார்.

தெய்வ நம்பிக்கை உடைய இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதற்காக, பெரியார் மீது உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

1954ல் அவ்வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டன.

1955 ஆம் ஆண்டு பர்மாவில் நடைபெற்ற புத்த மகாநாட்டின் அழைப்பை ஏற்று பெரியார் பர்மா சென்றார்.

பர்மாவின் விடுதலைக்காகப் பாடுபட்ட 'அவுஸ் சான்' னின் கல்லறைக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தார்.

பர்மாவில் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு 17.1.1955 ல் சென்னை வந்தார்.

தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்றும் -

கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டுமென்றும் பெரியார் தொடர்ந்து தனது கூட்டங்களில் பேசி வந்தார்.

27.12.1956 ஆம் ஆண்டு பெரியார் கண்ட கனவு நிறைவேறியது. பெரியார் விரும்பியபடியே -