பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தந்தை பெரியார்


தமிழை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேறியது. தமிழில் அர்ச்சனை செய்யவும் அரசு அனுமதியளித்தது.

பிறகு, சாதி முறைகளையும்; குல ஆசாரங்களுக்கும், பாதுகாப்புத் தரும் இந்திய அரசியல் சட்டத்தை பெரியார் எதிர்த்தார்.

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அதற்காக சிறை தண்டனை அடைந்தார் பெரியார்.


34. தமிழ் நாட்டை ஆட்சி செய்த
முதல் தமிழர்

"சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல, கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்க வேண்டும்."

- தந்தை பெரியார்

இந்தியாவின் இரண்டாவது பொதுத் தேர்தல், 1957 -ம் ஆண்டு நடைபெற்றது.

அப்பொழுது -

திராவிட முன்னேற்றக் கழகம் மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இணையாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.

காங்கிரசு கட்சியின் வேட்பாளராக காமராசர் களத்தில் இறங்கினார்.