பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தந்தை பெரியார்


தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் காமராசரை ஒரு விடிவெள்ளி என்று புகழ்ந்தார்.

1960 -ம் ஆண்டு பெரியார் தனித் தமிழ்நாடு பிரிவினை கோரினார். இதற்காகத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள தேசப் படத்தை எரித்தார்.

அரசு பெரியாரைக் கைது செய்தது.


35. இந்தி எதிர்ப்புப் போர்

"ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்."

- தந்தை பெரியார்

காமராசர் தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பற்பல நன்மைகளைச் செய்தார்.

மக்கள் அவரை 'கர்ம வீரர்' காமராசர் என்று போற்றிப்புகழ்ந்தனர்.

காமராசரின் வெற்றிக்குப் பெரியார் பெரிதும் பின்புலமாக உதவினார்.

மக்களிடையே 'காமராசரின் ஆட்சி தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் அவரால் தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஏற்றம் ஏற்படும்' என்று தமது பிரசாரத்தின் போதெல்லாம் பெரியார் தவறாது கூறிவந்தார்.