பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

155


1962 - ம் ஆண்டு தமிழ் நாட்டில் காங்கிரசின் மூன்றாவது பொதுத் தேர்தல் நடந்தது.

முதல் தடவையாக காங்கிரசை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் போட்டி இட்டது.

காஞ்சிபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அறிஞர் அண்ணா போட்டி இட்டார்.

பெரியாருக்கு அண்ணாவிடம் உள்ள ஆரம்பக் கோபம் தணியவே இல்லை.

அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளரையும், காமராசரையும், காங்கிரசையுமே பெரியார் முழு மூச்சோடு ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்தார்.

காமராசர் வெற்றி பெற்றார்.

அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளரும்; காங்கிரசுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

காமராசர் இரண்டாவது தடவையாக முதல்வரானார். இந்த சமயம் -

சீனா திடீரென்று இந்தியாவைத் தாக்கியது. நாடு முழுதும் நிதி திரட்டப்பட்டது.

அறிஞர் அண்ணா நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை உணர்ந்தார். ஆட்சியைப் பிடிக்க முடியாமற் போனதை அறவே மறந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏராளமாக நிதி திரட்டி நேருஜிக்கு அனுப்பி வைத்தார்.