பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தந்தை பெரியார்


காமராசர் ஆட்சி தமிழகத்தில் ஓர் பொற்காலத்தை உருவாக்கி வந்தது.

மத்திய அரசோ; மீண்டும் கட்டாயமாக இந்தியை ஆட்சிமொழியாக்க முயன்றது.

அப்போது காமராசர் ஆட்சிப் பொறுப்பை பக்தவத்சலனாரிடம் ஒப்படைத்திருந்தார்.

1965, ஜனவரி 29-ம் நாள் முதல் இந்தியே ஆட்சி மொழியாகும் என்று மத்திய அரசு அறிவித்தது.

1965 குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார் பெரியார். இந்தி திணிப்பை எதிர்த்து போர்ப் பிரசாரம் தொடங்கினார்.

அத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த பொது மக்கள் பொங்கி எழுந்தனர்.

முன் எச்சரிக்கையாக அண்ணா கைது செய்யப்பட்டார். போராட்டம் இன்னும் சூடு பிடித்தது. மாணவர்கள் படை திரண்டு எழுந்தனர்.

மதுரையில் பெருங்கலவரம்; சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு; பள்ளிகள் கடைகள் மூடப்பட்டன.

இந்தியை எதிர்க்க தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்; ஆயினும் நாட்டின் மோசமான நிலையை உணர்ந்த பெரியார் போராட்டத்தை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.

ஆயினும் மொழிப் பிரச்சினை; மக்கள் மனதில் காங்கிரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை பெரிதும் துண்டி விட்டுவிட்டது.