பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

159


என்று பெரியார் எண்ணினார். அண்ணா நிறைவேற்றினார். நின்ற காங்கிரஸ் வேட்பாளரைப் புகழ்ந்து பேசினார்.

அவருக்கே ஒட்டு அளிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொண்டார்.

முந்தையத் தேர்தலைப் போலவே, இம்முறையும் தி.மு.கழகம் தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்று காங்கிரஸ்காரர்களை போலவே பெரியாரும் எண்ணியே எதிர்ப்புப் பிரசாரம் செய்தார்.

ஆனால் -

கோழி மிதித்து குஞ்சு சாகுமா..?

அண்ணா அமோக வெற்றி பெற்று விட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசு கட்சியைத் தோற்கடித்ததுடன், பெருவாரியான வாக்குகள் பெற்று ஆட்சியையும் பிடித்துவிட்டது.

காமராசரும் - காங்கிரசுகாரர்களும் நிலைகுலைந்து போனார்கள்.

இப்போது கோட்டை அவர்கள் கையில், அண்ணா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தார். இப்படியொரு இன்ப அதிர்ச்சியைத் தமிழ் மக்கள் தருவார்கள் என்று அண்ணா எதிர்பார்க்கவே இல்லை.

கையில் வந்து விழுந்த கழகத்தின் வெற்றிக் கனியை ஏந்திக் கொண்டு நேராக திருச்சியை நோக்கி விரைந் தார்.

மனம் சோர்ந்து போயிருந்த பெரியார் அப்போது திருச்சியில் போய் தங்கியிருந்தார்.