பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

161


1962 - ல் தோல்வியுற்ற அண்ணா, இம் முறையும் தேர்தலில் போட்டி இட்டார்.

அண்ணாவின் வெற்றிக்காகத் தமது சுதந்திரா கட்சி மூலம் அரும்பாடு பட்டவர் இராஜாஜி. மேடை தோறும் அண்ணாவைப் புகழ்ந்து மக்களை மனம் மாறச் செய்தவர் இராஜாஜி.

தந்தை பெரியாரின் ஆசிக்குப் பதிலாக அவரது பெரும் எதிர்ப்பில் எதிர்நீச்சல் போட்டவர் அண்ணா!

அந்த நீச்சல் வீரர் இன்று வென்றது மல்லாமல் - அந்த மாபெரும் வெற்றியை -

- ஓர் ஒப்பற்ற குருவிற்கு சிஷ்யன் செலுத்தும் பணிவான காணிக்கையாக? தந்தை பெரியாருக்கு அளித்துவிட்டார்.

இது எவ்வளவு பெரிய காரியம்! உலகில் எத்தனை பேருக்கு அண்ணாவைப் போன்ற அபூர்வ மனமிருக்க முடியும்!

நெகிழ்ந்து போன பெரியாரால் விழி நீரைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

அண்ணாவைத் தழுவிக் கொண்டு வாழ்த்தினார்.

பெரிய மனச் சுமை குறைந்தவர்போல, அன்றே பெரியார் சென்னை வந்தார்.

அன்றைய விடுதலை நாளிதழின் தலையங்கத்தில் முதல்நாள் காங்கிரசு தோற்றுப் போனதற்கான காரணங்களைப் பற்றித் தெளிவாக எழுதினார்.

அதற்கு அடுத்த மறுநாளிலிருந்து - அண்ணாவின் வெற்றியைப் பாராட்டியும், அண்ணாவின் அமைச்