பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

163


"அம்மாதிரி நிலை ஏற்பட்டால் அண்ணா தமது ஆட்சியை நிலை நிறுத்த அவர்கள் சொல்லுகிறபடி காரியங்களை நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாகத் தான் வேண்டும்."

"எனது நிலை பக்கத்து வீட்டுக்காரிக்கு சேலையை இரவல் கொடுத்துவிட்டு அவள் போய் உட்காருகிற இடத்திற்கெல்லாம் போய் ஜமுக்காளத்தை விரிக்கின்ற கதையாகிவிட்டது."

"நாற்பது ஐம்பது ஆண்டுகளாக நாட்டில் ஒரு உணர்ச்சியைப் பரப்பி வந்து இருக்கிறேன்."

- அந்த உணர்ச்சி குன்றிப் போய்விடாமல் பாதுகாப்பது என் கவலையாகிவிட்டது. அதற்காக அண்ணாவிடமிருந்து இராஜாஜியைத் தூர விலக்கி வைக்க வேண்டியிருக்கிறது.

"நான் சொல்லுகிறேன், அண்ணா திருச்சி வந்து என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால்; நானே அண்ணாவிடம் வலியச் சென்று 'நான் உங்களை ஆதரிக்கிறேன்' என்று மானத்தை விட்டுச் சொல்லவும் தயாராக இருந்தேன்."

இப்பொழுது சொல்லுங்கள் - தொண்டு எண்ணங்கள் கொண்ட இரண்டு உள்ளங்களின் உயர்வைப்பற்றி,

- வானத்தை விட்டுப் பிரிந்த நிலவு தன்னைத் தேடி வராவிட்டால் நிலவைத் தேடி வானம் புறப்பட்டு வந்திருப்பேன் என்றது.