பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

165


'இது தமிழ் நாட்டை ஆளுகிற தமிழரின் ஆட்சி’ என்பதை அறிஞர் அண்ணா தமது ஒவ்வொரு அரசு ஆணைகளின் போதும் நிருபித்து வந்தார்.

'மெட்ராஸ் ஸ்டேட்' என்று மெல்லிய ஆங்கிலத்தில் வெள்ளையன் வைத்த பெயருக்கு விடை கொடுத்தார்.

'சென்னை மகாணம்' என்று அதுவரை அழைக்கப் பட்டு வந்ததை; 'தமிழ்நாடு' என்கிற புதிய பெயரிட்டு அழைக்க ஆணை பிறப்பித்தார்.

1967 - ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்ட சபையில் நிறை வேறியது.

பெரியார் காங்கிரசில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாகச் சொன்ன சொல், 'தமிழ்நாடு' என்கிற வார்த்தை அது இன்று அண்ணாவின் ஆட்சியில் சட்ட பூர்வமாக நிறைவேற்றுப்பட்டது.

'ஸ்ரீ, ஸ்ரீமதி' என்கிற வடமொழிச் சொற்கள், திரு என்றும் திருமதி என்றும்; குமாரி என்கிற சொல் 'செல்வி' யாகவும் இடம் பெற ஆணை பிறப்பிக்கப் பட்டது.

களிப்பில் பூரித்துப் போயிருந்த பெரியாருக்கு 17.9.1967 அன்று முதல் முதலில் திருச்சியில் சிலை வைத்து பெருமைப் படுத்தினார் அண்ணா.

பெரியார் நடத்தி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள்; குடிஅரசுத் தலைவரின் ஒப்புதலோடு; சட்ட பூர்வமானதாக ஆக்கப்பட்டது.

1968 -ம் ஆண்டு பெரியார் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர்; பிற்படுத்தப்