பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தந்தை பெரியார்


பட்டோர்; சிறுபான்மையினர் மகா நாட்டிற்குச் சென்று சிறப்புச் சொற்பொழி வாற்றினார்.

1968 -ல் தனித்தமிழ்நாடு கோரி, டில்லி ஆதிக்கக் கண்டன நாள் மேற்கொண்டார்.

அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக் கழகம் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தது.

அழைப்பை ஏற்ற அண்ணா தமது சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள 15.4.1968 அன்று சென்னையை விட்டுப் புறப்பட்டார்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்ற அண்ணா 12.5.1968 சென்னை திரும்பினார்.

கடுமையான உழைப்பின் காரணமாக அண்ணா உடல்நலம் குன்றினார். 10.9.68 அன்று சிகிச்சைக்காக, அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

பெரியார் மீண்டும் தமது சுயமரியாதை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

தமிழகம் முழுதும் அண்ணாவின் ஆட்சியைப் பாராட்டிப் பேசினார்.

அதுவரை 'ஆகாஷ்வாணி' என்று வழங்கிய பெயர், 'வானொலி என்று மாற்றப்பட்டது.

6.11.68 அன்று அண்ணா சிகிச்சைமுடிந்து சென்னை திரும்பினார்.

1.12.68 அன்று 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் திருவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது.