பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

169


இராணுவ பாண்டுகள் சோககீதம் இழைக்க, பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் புனித உடல் சமாதியில் வைக்கப்பட்டது. தந்தை பெரியார் மறைந்து விட்டாலும் அவர் விடடுச் சென்ற கொள்கைகள் என்றும் தமிழர்களுக்கு வழிகாட்டும்.


39. பகுத்தறிவுச் சோதியின் சுயமரியாதைப் பயணம்...

"பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை."

- தந்தை பெரியார்

1879 - செப்டம்பர் 17-ல் ஈரோட்டில் பிறந்தார்.

தந்தை - வெங்கடப்ப நாயக்கர்

தாயார் - சின்னத் தாயம்மை

1885 - பள்ளியில் சேர்ந்தார்.

1891 - பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தப் பட்டார்.

1892 - வியாபாரத்தில் ஈடுபட்டார்.

1898 - 19வது வயதில் நாகம்மையை (13 வயது) மணந்தார்.

1902 - கலப்புத் திருமணங்கள் நடத்தி வந்தார்.

அனைத்து சமயத்தினர் - சாதியினருடன் சேர்ந்து விருந்து உண்டார்.