பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

23



பின்னாளில், அக்குழந்தையே, தந்தை பெரியாரானார். மிகச் சிறந்த சீர்திருத்தச் சிந்தனையாளர் என்றும் -

மனிதாபிமானம் மிக்கவர்; சுயமரியாதைக்காரர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களை, தலைநிமிரச் செய்தவர் என்றும்; ஒடுக்கப்பட்டவர்களுக்குப் புதுவாழ்வு கொடுத்தவர் என்றும் தந்தை பெரியாரைப் பலரும், பலவிதமாகப் போற்றிப் புகழ்ந்தாலும் -

தந்தை பெரியார், தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் என்று, தந்தை பெரியாரிடமே கேட்போமே!

நான் யார்?

"ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்கொண்டு, அதே பணியாய் இருப்பவன்."

- தந்தை பெரியார்

தந்தை பெரியார் இப்படித்தான் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார்.

சமத்துவம், சகோதரத்துவம் என்கிற அடிப்படையில், மனிதனுக்கு மனிதன், உயர்வு தாழ்வு இல்லாத, சுயமரியாதை மிக்க, ஓர் உன்னதமான சமுதாய மறுமலர்ச்சி காண, இரவு பகலாகப் பாடுபட்டார்.

எதிர்ப்பையே சுவாசித்து வளர்ந்த தந்தை பெரியார், எதற்கும் அஞ்சாத வீரனாய்; கொள்கை முழக்கத்தோடு,