பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தந்தை பெரியார்


மேலை நாட்டில் ஒருவரிடம் இந்தியா பற்றிக் கேட்டபோது; "காந்தி நாடா?" என்று கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டாராம்.

அதே போல -

"ஈரோடு", என்றால் தந்தை பெரியார் பிறந்த ஊர் என்று இன்று உலகெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த ஈரோடு நகரம் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகும்.

சேர மன்னர்களான சங்கர்கள் பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள், ஒய்சளர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும் மைசூர் மன்னர்கள் ஆட்சியிலும் இப்பகுதி இருந்தது.

மைசூர் மன்னர், 'சிக்க தேவராயன்' தெற்கில் படையெடுத்தபோது அவருக்கும் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதருக்கும் ஈரோட்டுக்கு அருகில் போர் நடந்தது.

இப்போரில் சொக்கநாதர் வெற்றி பெற முடியாமல் ஈரோடு கோயமுத்தூர் பகுதிகளை மைசூர் மன்னரிடம் (கி.பி. 1676)ல் இழக்க வேண்டியதாயிற்று.

மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆட்சிக் காலத்தில் ஈரோடு செழிப்புமிக்க நகரமாக விளங்கிற்று. ஆனால் -

மராத்தியர் ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளினால் இந்நகரம் பெரிதும் சேதமுற்றும் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் மீண்டும் சிறப்புப் பெற்றது.