பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தந்தை பெரியார்



வெங்கடப்ப நாயக்கர் அங்குமிங்கும் ஓடி அலைந்து நல்ல சரக்குகளாகவே வாங்கி வியாபாரம் செய்தார்.

இதனால் மக்களிடையே அவரது கடை பிரபலமாயிற்று. வியாபாரம் அமோகமாகப் பெருகிப் பணப் புழக்கம் அதிகமாயிற்று.

சிறியதாய்த் துவங்கப்பட்ட மளிகைக் கடை நாளுக்கு நாள் விருத்தியடைந்து பெரிய மண்டிக் கடையாக உருவாயிற்று.

சில்லரை வியாபாரத்துடன் -

மொத்த வியாபாரமும் செய்யுமளவிற்கு வெங்கடப்ப நாயக்கருக்கு வசதியும் அந்தஸ்தும் உயர்ந்து விட்டது.

ஆயினும் -

கணவன் மனைவியரிடையே துளிக்கூட கர்வம் தலை தூக்கவில்லை.

எல்லோரிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகினார்கள்.

அவரிடம் பல ஆட்கள் வேலை செய்தார்கள். எல்லோரும் அவரை முதலாளி என்றே அழைத்தார்கள். புதிய வீடு ஒன்றும் வாங்கினார்.

இப்படி நிறை வாழ்வு வாழ்ந்தும் -

வெங்கடப்ப நாயக்கருக்கும், சின்னத்தாய் அம்மையாருக்கும் உள்ளத்தில் பெரும் குறையொன்று சதா உறுத்திக் கொண்டேயிருந்தது.

அது -