பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

31



அவர்களுக்கென்று மக்கட்பேறு இல்லாத பெருங்குறைதான்.

கணவரும் மனைவியும் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத தானதருமங்கள் இல்லை.

சதா இறைவனை வழிபட்டே வந்தனர். தன் வீடு தேடி வரும் அடியார்க்கும், ஏழைகளுக்கும் சின்னத் தாயம்மையார் முகமலரச்சியுடன் அமுது படைத்து அவர்களது ஆசி பெற்றார்.

இத்தனை போதாது என்று -

சின்னத்தாய் அம்மையார் தவறாமல் விரதம் நோன்பு ஆகியவற்றை பக்தியுடன் நிறைவேற்றி வந்தார். இறுதியில் -

ஒருநாள் அவர்களுடைய பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்த்து விட்டதாக கணவன் மனைவி இருவருமே மகிழ்ந்தனர்.

1877-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சின்னத்தாயம்மையார் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

கணவரும் மனைவியுமாக அக்குழந்தைக்கு திருமாலின் பெயரான கிருஷ்ணசாமி என்கிற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.

கிருஷ்ணசாமிக்கு இரண்டு வயதாகும்போது 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தைக்கு 'இராமசாமி' என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.