பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வி அறிவில்லாமல் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் அவர் கண்முன்னே நின்றன. அதனால் அடைய நேரிட்ட அவமானங்களை அவரது நெஞ்சம் மறக்கவில்லை -

'அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி' -

என்கிற பாரதியின் வரிகளை அவர் படித்ததில்லை.

ஆயினும் -

தன்னையே உதாரணமாகக் கொண்டு ஊரிலுள்ள ஏழைச்சிறுவர்களை எண்ணிப் பார்த்தார்.

மற்றெதனையும் விடக் கல்விச் சாலையே அவரது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

ஈரோட்டில் மஹாஜன ஹைஸ்கூல் என்கிற பள்ளியை நிறுவினார்.

எண்ணற்ற, ஏழைக் குழந்தைகளின் அறிவுக்கண் திறக்க வெங்கடப்ப நாயக்கர் கட்டிய, ஆலயத்திலும் சத்திரத்திலும் சிறந்த பள்ளிக்கூடம் -

இன்றும் அவரது அழியாப் புகழையும் கருணை உள்ளத்தையும் பறை சாற்றி நிற்கின்றது.

★ பசிக்குச் சத்திரமும்

★ கல்விக்குப் பள்ளியும் கட்டிய பிறகு - மனிதனை வாட்டும்

★ பிணிக்கு வழி செய்யவில்லையே என்று எண்ணினார். அன்றே -