பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

35



ஈரோட்டில் தர்ம வைத்திய சாலை ஒன்றை நிறுவி முப்பிணிக்கும் மருந்திட்ட பெருமகனானார்.

வெங்கடப்ப நாயக்கரும் சின்னத்தாயம்மையாரும் தங்களின் இரு புதல்வர்களையும் இரண்டு கண்களைப் போல் கருதினர்.

அன்பையும் பாசத்தையும் கொட்டி அவர்களை மிகவும் ஆசை ஆசையாக வளர்த்து ஆளாக்கினர்.

தக்க வயது வந்ததும் ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெ.இராமசாமியையும் பள்ளியில் சேர்க்க ஆசைப் பட்டார்.

இராமசாமியின் சிறிய பாட்டியார் குடும்பத்தில் குழந்தை இல்லாததால் - இராமசாமி பாட்டியார் குடும்பத்தில் சுவீகார புத்திரனாக வளர்ந்து வந்தார்.

இராமசாமி குழந்தைப் பருவத்திலிருந்தே மிகுந்த பிடிவாதமும், குறும்புத்தனமும் நிறைந்தவராக இருந்தார்.

இப்போது -

அவரைக் கண்டித்து வளர்க்க அப்பாவோ, அம்மாவோ அருகில் இல்லாததால் இராமசாமிக்கு மிகுந்த சவுகரியமாயிற்று. பாட்டியைப் பற்றி பயமே அவருக்கு இல்லை.

மனம் போல் ஊர்க் குழந்தைகளுடன் சுற்றித் திரிந்துவிட்டு, இஷ்டத்திற்கு வீட்டிற்கு வருவார். பள்ளிக்குச் சென்றாலும் சக மாணவர்களுடன் சண்டை, வாக்குவாதம் தினம் தினம் ஊர்ச் சண்டை.

தட்டிக் கேட்க ஆளில்லாததோடு பாட்டியார் கொடுக்கிற அளவுக்கு மீறிய - செல்லத்தினால் தன்