பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தந்தை பெரியார்



கல்வி அத்தகையது அல்லவே! காலத்தோடு - இளமையில் தேடி அடைய வேண்டிய வற்றாத செல்வமல்லவா கல்வி.

இதையெல்லாம் இராமசாமிக்கு விளக்கிச் சொன்னால் அவன் புரிந்து கொள்வான் - என்று இப்படிப் பலவாறாக எண்ணி; இரவு வெகுநேரம் வரை மகனைப் பற்றிய சிந்தனையிலேயே உறக்கம் வராமல் விழித் திருந்தார் - வெங்கடப்ப நாயக்கர்.

மறுநாள் காலை -

வெங்கடப்ப நாயக்கர் குளித்துக் குறியிட்டு, சாமி கும்பிட்டு, ஹாலுக்கு வந்தபோது அவர் பிரமித்துப் போனார்.

அவர் கண்களையே அவரால் ஒருகணம் நம்ப முடியவில்லை.

அண்ணன் கிருஷ்ணசாமியைப் போலவே ராமசாமியும், அழகான உடைதரித்து, தோளில் புத்தகப் பையைத் தொங்க விட்டுக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான்.

சின்னத்தாயம்மையார் அவனது தலையைச் சீவி, நெற்றியில் அழகான பொட்டும் வைத்தார்.

பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டு இராமசாமி அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.

ஈரோட்டிலுள்ள பள்ளியில் சேர்ந்த அன்று முதல் ஆரம்பச் சில நாட்கள் இராமசாமி ஒழுங்காகத்தான் பள்ளி சென்று வந்தார்;