பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

39



பாட்டி ஊரிலுள்ள பள்ளியை விட இது பெரிதாக இருந்ததுடன் நிறைய மாணவர்களும் பல ஆசிரியரும் இருந்தனர். அங்கு நடப்பதெல்லாம் அவருக்கு விசித்திரமாகவே பட்டது. எல்லோருடனும் சேர்ந்து கை கூப்பி கடவுள் வாழ்த்துப் பாடுவது வேடிக்கையாயிருந்தது.

பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை வீட்டில் வந்து படித்து உருப் போட்டு மறுநாள் அதை ஒப்புவிக்க வேண்டும் என்பது இராமசாமிக்கு மிகவும் தொல்லையாகத் தோன்றியது.

கிருஷ்ணசாமியோ, எதைப் பற்றியும் கவலைப் படாமல் பள்ளி விட்டு வந்ததும் ஒழுங்காக வீட்டுக் கணக்குகளை முடித்தார். மறுநாள் கூற வேண்டிய பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டார்.

இராமசாமிக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. பள்ளிக்கூடம் சிறைச்சாலை போல் தோன்றியது அவருக்கு. ‘இஷ்டம் போல், ஊர்ப்பிள்ளைகளுடன், பாட்டி ஊரில் சுற்றித் திரிந்தது -

கையில் காசு எடுத்துச் சென்று விருப்பம் போல் தோன்றிய இடத்தில் எல்லோருடனும் சேர்ந்து வாங்கித் தின்று விட்டு வந்தது -

பள்ளிக்குச் செல்லாமல், புத்தகப்பையை மரக்கிளையில் தொங்கவிட்டு விட்டு,

மனம் போல் யாரும் காணாத மைதானத்தில் இஷ்டம் போல் விளையாடியது;

குளக்கரை, ஏரிக்கரை வழியாக சக நண்பர்களுடன் குஷியாகச் சிரித்துப் பேசிக் கழிந்த நாட்கள் ஆகியவை