பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தந்தை பெரியார்



இராமசாமியின் நினைவில் அடிக்கடித் தோன்றி வருத்தியது.

வேண்டா வெறுப்பாகத் தோளில் பையை மாட்டிக் கொண்டு -

அப்பா அம்மாவுக்குப் பயந்து, அண்ணன் பின்னால் பள்ளிக்குச் சென்று வந்தார்.

ஆனால் இது அதிக நாள் நீடிக்கவில்லை. பள்ளிப் பாடங்களில், இராமசாமியின் மனம் லயிக்க மறுத்தது.

ஆசிரியர், அதட்டி உருட்டி அடித்துப் பிள்ளைகளைப் பணிய வைக்கக் கூடிய ஒரு பொல்லாத உருவமாகவே இராமசாமியின் கண்களுக்குப் பட்டது.

இதனால் -

பள்ளி செல்வதிலுள்ள நாட்டம் அவர் உள்ளத்தில் படிப்படியாகவே குறைந்து கொண்டு வந்தது.

ஆசிரியர் கற்றுக் கொடுப்பது எதுவும் தேவைப் படாதது போலவும் -

அதைவிடத் தனக்குப் பல விஷயங்கள் தெரியும் என்பது போலவும் ஒருவித அலட்சியப் போக்கு அவருள் உருவானது.

கிருஷ்ணசாமி, இராமசாமியின் குணாதிசயங்களுக்கு நேர்மாறாக விளங்கினார்.

ஒழுங்காகப் பள்ளி சென்று வந்தார். காலந்தவறாமல், பாடங்களை வீட்டில் நன்றாகப் படித்து வகுப்பில் முதலாவதாகவும்; பள்ளியிலேயே மிகவும் நல்ல பையன் என்கிற நற்பெயரையும் பெற்று வந்தார்.