பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

45


குழந்தையா அவன்; வயசு பத்தாகல்லே... கூடப் பொறந்த அண்ணன்தானே கிருஷ்ணசாமி! அவன் எப்படிப் படிக்கறான்? எவ்வளவு அடக்க ஒடுக்கமா எல்லார்கிட்டேயும் நடந்துக்கறான். அவனைப் பத்தி இன்னிவர, யாராவது ஏதாவது தப்பாச் சொல்லி யிருப்பாங்களா?"

"போதும் நிறுத்துங்க உங்களுக்கு எப்பவும் இராமசாமின்னா.... ஒரு எளப்பமும்; கோவமும்தான். மூத்தவனைப் போல அவனும் நமக்கு ஆசையாய் பொறந்த பிள்ளைதானே! ஏன் ஒரு கண்ணிலே வெண்ணெயும்; ஒரு கண்ணிலே சுண்ணாம்பும் மாதிரி நடந்துக்கறிங்க?”

"நானா அப்படி நடந்துக்கறேன்?" வெங்கடப்ப நாயக்கர் வியப்போடு கேட்டார்.

"பின்னே என்ன? சில புள்ளங்க, ஆரம்பத்திலே சுறுசுறுப்பா இருக்கும், சில புள்ளங்க பின்னாலே சூரப்புலியா வருவாங்க. உங்களுக்கு ஆமையும் முயலும் கதை தெரியுமில்லே..."

"எனக்கு உன்னோடு ஒரு கதையும் கேட்க வேண்டாம். இதோ... இவனாலே இன்னும் கொஞ்ச நாள்லே நம்ம வீட்டுக்கு கதை சொல்ல வர்றவங்களே நின்னுடுவாங்க போலிருக்கு. அப்புறம் நீயும், நானும மாறி மாறி கதை சொல்லிட்டு இருக்கலாம்.”

"நீங்க என்ன... புதுசு புதிசாப் புகார் சொல்றீங்க?" என்றார் வியப்போடு சின்னத்தாயம்மையார்.

"நடந்ததை நான் சொல்லாட்டி உன்கிட்டே வந்து வேறெ யார் சொல்லுவாங்க? இவனப் பத்தி முழுசுமா