பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

47


கேட்டு புண்ணியம் பெறணும்கறதுக்காகத்தான் நம்ம வீட்டைத் தேடி, கதை கேக்க பல பேரு வர்றாங்க -

நாம எல்லோரும் இதுவரை அவங்க சொல்லறதையெல்லாம், பக்தியோடு கேக்கறோமே தவிர, நீயோ, நானோ இப்படி எப்பவாவது எதிர் கேள்வி கேட்டிருக்கோமா? சரி போவட்டும்; பஞ்சு தீஷதரை உனக்குத் தெரியுமில்லே?" கேட்டுவிட்டு வெங்கடப்ப நாயக்கர், பதிலுக்காக மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

"தெரியும்... சொல்லுங்க பெரிய வேதவித்து. புராணங்கள் எல்லாம் படிச்சு; நிறைய பட்டமெல்லாம் வாங்கினவரு. அவருக்கு என்ன இப்போ?”

"அவருக்கு ஒண்ணுமில்லே. இதோ நிக்கறானே உன் பிள்ளை இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமான்னு, சாது மாதிரி. அவனுக்குத்தான் கிறுக்குப் பிடிச்சுப் போச்சு அவ்வளவு பெரிய பண்டிதரைப் போய் இவன் என்ன கேள்வி கேட்டிருக்கான் தெரியுமா?’’

“எனக்கென்ன தெரியும்; சொல்லுங்க..." "கோவில்லேயிருந்து அவரு வீட்டுக்குப் போறப்போ "ஐயா" ன்னு கூப்பிட்டிருக்கான்.

திரும்பிப் பார்த்தாரு. இவனைப் புரிஞ்சுக்கிட்டு, "என்னப்பா விஷயம்... அப்பா ஏதாவது சொல்லி அனுப்பினாரா" என்று கேட்டிருக்காரு.

"ஒண்ணுமில்லே ஐயா, முந்தா நாள் கதை சொன்னீங்களே... அதிலே ஒரு சந்தேகம்" என்று கேட்டிருக்கான்.