பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

இது என்ன வரலாற்று உரைநடையா?-ஐயம் வரும்! தென்றல் தவழ்கிறது. தேனருவி வீழ்கிறது. புரட்சிப் புயல் வீச்சும் உண்டு. சின்னஞ்சிறு தொடர். சிங்காரச் சொல்லமைப்பு - செவிக்கு விருந்தாய் தேனிசை போல் உவமைகள் - உருவகங்கள். எழுத்து மன்னன் "நீலமணி" பிடில் வாசித்துப் பழகியவர் என்பது படிக்கும் போதெல்லாம் பலமுறை உணர்ந்தேன். எழுத்தில் ஏற்றம், எண்ணக் குவியல். சிந்தனைச் சிகரங்கள் - இப்படிப் பலப்பல.

26 ஆண்டுகள் தினமணியின் இணை ஆசிரியரல்லவா? என் நண்பர் கீழாம்பூர் அவர்கள் இப்படி என்னை முன்னுரை எழுதப் பணித்து விட்டாரே! என்ற பொறுமல் என்னுள் இருந்தது உண்மைதான். ஆனால் நூலைப் படிக்கும்போது தான், நூலுக்கு முன்னுரை எழுதச் சொல்லி நமக்கு உயர்வு தந்திருக்கிறார் என்று உணர்ந்தேன்.

குழந்தையும் படிக்கலாம் - புரியும்! இளமையும் ஏற்கும். முதுமை, படித்து முறுவல் பூக்கும்! பெரியாரைப் பற்றிப் பொருள் உள்ள சொல் வளம் புத்தமிழ்தாய் இனிக்கிறது.


   “படரும் சாதிப்படைக்கு மருந்து -
    மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு