பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தந்தை பெரியார்


“என்னான்னு கேட்டாரு; இவன் என்ன கேட்டான் தெரியுமா, ஐயா கல்யாணத்துக்கு முந்தி குந்தியம்மா சூரிய பகவான்கிட்டே குழந்தை பெத்துக்கிட்டதாச் சொன்னிங்க. ஆனா கல்யாணத்தப்போ... சூரியனைப் பண்ணிக்காமெ; ஏன் பாண்டு மகாராசாவைக் கட்டிக் கிட்டாரு" ன்னு கேட்டிருக்கான்.

"சின்னப் பையன் கேக்கற கேள்வியா இது, அதுவும் நடு ரோட்டிலே நிறுத்தி...”

"அது சரி... அந்த ஐயா என்ன பதில் சொன்னாராம்?”

“என்ன சொல்லுவாரு... தம்பி, இதையெல்லாம், பத்தாம் நாள் கதையும்போது நல்லா விளக்கமாச் சொல்லறேன்னு அனுப்பிச்சுட்டாரு."

"நேத்திக்குக் காத்தாலே என்னைப் பார்த்ததும், ஏன்... நாயக்கரேன்னு எல்லா விஷயத்தையும் சொல்லிப்புட்டு, 'பையன் பெரிய நாத்திகனா இருப்பான் போலிருக்கே... உங்களோட பக்திக்கும், பவ்யத்துக்கும் இப்படியொரு பிள்ளையா? ஏதோ கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கு போலிருக்கு. பையனை சாக்கிரதையாப் பார்த்துக்குங்கோ' அப்படின்னுட்டுப் போனாரு.”

சின்னத்தாயம்மையாருக்கு மனதை என்னமோ செய்தது. மிகுந்த துயரத்துடன் மகனின் அருகில் சென்று, "ஏன் ஐயா... அவ்வளவு பெரிய பண்டிதர்கிட்டே, இப்படி அசிங்கமா எல்லாம் கேள்வி கேக்கலாமா? தப்பு இல்லையா", என்று தலையை வருடியபடிக் கேட்டார்.

"எனக்குத் தப்பாத் தோணல்லேம்மா சீதாம்மா, ருக்மணியம்மா இவங்க எல்லாம் தாங்க விரும்பின