பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

49


வங்களையே கட்டிக்கிட்டதாச் சொன்னாரு. இந்த குந்தி அம்மா மட்டும் ஏன் இப்படித் தப்புப் பண்ணினாங்கன்னு கேக்கணும்னு தோணிச்சு, அது தாம்மா கேட்டுட்டேன்."

சின்னத்தாயம்மையார் பிள்ளையின் கன்னத்தில் முத்தமிட்டபடி, "இதப்பாருய்யா... குந்தியம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களும் உன்னாட்டமா குழந்தைத்தனமா அப்படி நடந்துகிட்டாங்க; அதுக்காக அவங்களாலே சூரியனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது; என்று விளக்கிக்கூறிக் கொண்டிருக்கும்போது வெங்கடப்ப நாயக்கர் தன் மனைவியிடம்,

"தாயம்மா... நாளையிலிருந்து இவன் கதை கேக்கறதை எல்லாம் விட்டுட்டு; கிருஷ்ணசாமி மாதிரி ஒழுங்கா ரூமிலே இருந்து படிக்கச் சொல்லு, நான் வரேன் கடைக்கு நேரமாச்சு" என்று சொல்லியபடி துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டபடி வெளியே சென்று விட்டார். சின்னத்தாயம்மாள் அவசரம் அவசரமாக இராமசாமியின் புத்தகப் பையை எடுத்துத் தோளில் மாட்டி, "கிருஷ்ணசாமி உன்னை விட்டுட்டுப் போயிட்டான். நீ தனியாப் போவியா?" என்று கேட்டார்.

"எனக்கு எதுக்கம்மா துணை நான் போயிட்டு வறேம்மா" என்று விடை பெற்று வெளியே வந்து விட்டார்.

வழியெல்லாம் இராமசாமிக்கு ஒரே யோசனையாக இருந்தது.