பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தந்தை பெரியார்



வகுப்பு ஆரம்பமாகியிருக்கும். நேரம் கழித்து வந்ததற்கு ஆசிரியர் காரணம் கேட்பார். இந்த வம்பெல்லாம் எதற்கு, என்று பள்ளிக்கூடமே போகாமல், தனக்குத் தெரிந்த நண்பர்களுடன் விளையாடிப் பொழுதைக் கழித்தார். மாலையில் ஒன்றுமே நடக்காதது போல் பள்ளிக்கூடம் விடுகிற நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விட்டார்.


7. இரு வேறு சுவையுடைய
ஒரு குலைக் கனிகள்

"ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ; அப்படியே எல்லோரிடமும் தான் கடந்து கொள்வதே ஒழுக்கம் ஆகும்.

படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில் பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்."

- தந்தை பெரியார்

ஒரே குலையில் உள்ள திராட்சைகளில் ஒன்று இனிக்கிறது; சில சமயம் மற்றொன்று புளிக்கிறது. இது ஏன்! திராட்சைக்கு மட்டுமல்ல... இயற்கையின் இந்த விசித்திரம், மனிதப் பிறவியிலும் நிகழத்தான் செய்கிறது.

ஒருவர் முகம் போல் ஒருவர் இல்லை, ஒருவர் குணம் போல் ஒருவர் குணம் இல்லை.

வெங்கடப்ப நாயக்கரின் இரண்டு பிள்ளைகளும் இப்படித்தான்.

இரண்டு விதமான - மாறுபட்ட குணாதிசயங்களுடனேயே இளமையிலிருந்து வளர்ந்து வந்தனர்.