பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

53


இராமசாமிக்கு யாரைப் பற்றியும் வரவர பயம் அற்றுப் போய்விட்டது.

சலீமின் வீட்டிற்கோ - இன்னும் இதுபோல் தன் சாதிக்காரர்கள் எட்டிவிலகும் வீடுகளுக்கெல்லாம் கூட இராமசாமி இயற்கையாய்ப் போய் வந்தார்.

ஒருநாள் -

அம்மா அவரை எதற்காகவோ ஆசையோடு அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது தடால் என்று அவனைத் தள்ளி விட்டார்.

"ஏண்டா இராமசாமி, பல்லுக்கூட ஒழுங்கா நிதமும் தேய்க்க மாட்டியா? வாயெல்லாம், என்னமோ நாத்தமா நாறுது” என்று கூறியபோது இராமசாமி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

சலீம் வீட்டுப்பிரியாணி அவரைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனாலும் அது என்ன கெட்ட வாசனை என்று அம்மாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அம்மா சொன்னதற்காக அவள் சந்தோஷத்திற்காக அந்த மாலை வேளையில் மீண்டும் ஒருமுறை பல் விளக்கினார் இராமசாமி.

இப்போது கூட சலீமின் வீட்டிலிருந்து வருகிறார். ஆனால், அன்று போல் அம்மாவின் அருகில் போய் மீண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது;

ஏன்? அம்மாவின் அருகிலேயே கூடப் போகாமல் இருப்பதுதான் நல்லது. உடம்பெல்லாம் கூட ஒரு வேளை பிரியாணி மணக்கலாம்; என்றே எண்ணினார்.

இராமசாமி, தோளில் மாட்டிய பையுடன் இப்படியெல்லாம் சிந்தித்தபடி, நகரின் ஒதுக்குப்புறமாயிருந்த