பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

தந்தை பெரியார்



போல உள்ளவங்களுக்குத் தண்ணி கூட கொடுக்க இயலாத பாவிங்க நாங்க.

நீங்க என் கையாலெ தண்ணி வாங்கிக் குடிச்ச சேதி தெரிஞ்சா; உங்களவங்க என் குடிசையை மட்டுமில்லே; இந்த தெருவையே கொளுத்திடுவாங்க.

கஞ்சியையோ கூழையோ குடிச்சிட்டு உங்க காலுங் கீழே எங்களை உசிரோட வாழ விடுங்க. அதனாலே சொல்றேன், தயவு செய்து இங்கெல்லாம் வராதீங்க... என் மகன் கூடப் பேசாதீங்க... சேராதீங்க... அவனை விட்டுடுங்க.”

அந்தத் தாய் கையெடுத்துக் கும்பிட்டாள். இராமசாமி, காளியின் பக்கம் திரும்பினார்.

தாயின் நீண்ட பேச்சைக் கேட்ட அவன், இன்னும் அதிகம் பயந்து போய், பரிதாபமாக இராமசாமியைப் பார்த்தான். இராமசாமி குடிசையைச் சுற்று முற்றும் பார்த்தார். ஒரு மூலையில் தண்ணீர்ப் பானை இருந்தது. மூடியிருந்த அதன் மீதிருந்த அலுமினியக் குவளையால் தாகம் தீரத் தண்ணீரை மொண்டு குடித்தார்.

காளியும், அவன் தாயாரும் இந்தக் காட்சியை பயந்து நடுங்கிய உள்ளத்துடன் பார்த்துக்கொண் டிருந்தனர்.

இராமசாமி மெளனமாக அந்தக் குடிசையை விட்டு வெளியே வந்து விட்டார்.

வழியில் அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் -