பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தந்தை பெரியார்


சாதிமத பேதமின்றி வெளியில் அவருக்குப் பலவிதமான நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு இரவு எப்போது வீடு திரும்புவார் என்று நாகம்மைக்கே தெரியாது.

நாகம்மை கணவரைப் பற்றி எதுவும் பிறரிடம் கூற மாட்டார். ஆனாலும்; இராமசாமியின் பெற்றோருக்கு எல்லா விஷயங்களும் புரிந்தன.

தன் மகனுக்காக ஒரு இளம் பெண்ணினுடைய வாழ்க்கையை வீணாக்கி விட்டோமோ என்று வெங்கடப்பரும் தாயம்மையாரும் உள்ளூர வருந்தினார்கள்.

முன்போல், பகிரங்கமாக மகனைக் கண்டிக்கவும் வெங்கடப்பராமல் இயலவில்லை.

இராமசாமி, திடீர் திடீர் என சாதி மதம் பாராமல், கடை வாடிக்கையாளர்கள் என்றும்; நண்பர்கள் என்றும் பலரைத் தன் வீட்டிற்கு முன் அறிவிப்பின்றி சாப்பாட்டிற்கு அழைத்து வந்து விடுவார்.

நாகம்மையார், சிறிதும் முகம் கோணாமல், நிமிஷ நேரத்தில் அனைவருக்கும் உணவு தயார் செய்து அன்போடு பரிமாறுவாள்.

இதையெல்லாம் கண்டு மனம் வெதும்பிய வெங்கடப்பர் மகன் தலையில் இன்னும் கூடுதல் பொறுப்பைச் சுமத்தினால் திருந்தி விடுவான் என்று எண்ணி -

தன் பெயரில் இருந்த கடையை இராமசாமி பெயருக்கு மாற்றி, முழுப் பொறுப்பையும் அவன் தலையில் சுமத்தினார்.