பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

77


கூடுதல் பொறுப்புக்களைத் திறமையாகச் சமாளித்தாரே தவிர; அதன் பிறகும் இராமசாமி தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

பக்தி நெறியும்; சுத்த சைவமுமாய் திகழும் வீடு அது. சிறு வயதில், நண்பன் சலீமின் பழக்கத்தால் புலால் உண்ணும் பழக்கம் இராமசாமிக்கு ஏற்பட்டது.

அதன்பிறகு அதன் சுவையிலிருந்து இராமசாமியால் மீளவே முடியவில்லை.

சைவக் குடும்பத்திலிருந்து வந்த நாகம்மையிடம், இராமசாமி நைச்சியமாகப் பேசி, அவளையும் உண்ணவும் செய்துவிட்டார்.

கணவரது குணாதிசயங்களை, இளம் வயதிலிருந்தே நன்கறிந்திருந்த நாகம்மை எதற்கும் மறுமொழி கூறாமல், கணவன் மனம் கோணாமல் நடப்பதை தன் கடமை என்று அனைத்தையும் சகித்து வாழ்ந்தாள்.

கடை வேலையை விட இராமசாமிக்கு வெளிவேலை தான் அதிகமாயிருந்தது.

ஊரில் எந்த மூலையில் அடிதடியோ; தொழில் தகராறாகிப் புருஷன் - மனைவி குடும்பச் சண்டையோ, எது நடந்தாலும் உடனே பலர் இராமசாமியைத் தேடி, கடைக்கோ வீட்டிற்கோ ஆட்கள் வந்து விடுவார்கள்.

எந்த ஒரு வழக்கையும் புத்தி பூர்வமாக நன்கு ஆராய்ந்த பிறகுதான் இராமசாமி ஒரு முடிவுக்கு வருவார். அதன் பிறகு -

இராமசாமி வழங்கிய தீர்ப்புக்கு மறு பேச்சிருக்காது. அனைவரும் கட்டுப்பட்டு நடப்பர். இதனால்,