பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தந்தை பெரியார்



நொந்தார்.உள்ளங்களில் வீசிய பொன் வசந்தம்!

இந்திய நாடு துலங்க வந்த காந்தி மகான் போல; நிறவெறியை ஒழிக்க, அடிமை விலங்கை அறுக்க வந்த மார்ட்டின் லூதர்கிங் போல;

சாதி வெறியையும், மூட நம்பிக்கைகளையும், ஆதிக்க வெறியையும் அடியோடு அழிக்க - வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார் என்கிறார் நீலமணி.

தந்தை பெரியார் பிறந்த நாள் தொட்டு வளர்ந்த நாள் வரை வரலாற்றுப் பெட்டகமாக வழங்கி இருக்கிறார். நிகழ்ச்சிகளைத் தொட்டால் தொடர்கதைபோல் வளரும்.

'கண்ணீரும்ம் தண்ணீரும்’ எனும் தலைப்பில் ஒரு செய்தியைத் தருகிறார்.

ஒருநாள் இராமசாமி (தந்தை ஈ.வெ.ரா.) பள்ளியை விட்டார். நகரின் ஒதுக்குப்புறம் ஓலைக் குடிசைகளின் வழி நடந்தார்.

ஒரு வீட்டிலிருந்து அழுகுரல்! "என்னை அடிக்காதேம்மா! நான் அந்த ஐயாகூடப் பேசல்லே, விளையாடப் போகல்லே" என்று சிறுவனின் அலறல்!

குடிசைவாயிலில் நின்றார்- கதவைத் தள்ளினார்- உள் நுழைந்தார்.

அடிபட்டு அழுதவன் தன் நண்பன் காளி. அவன் தாயின் கையில் விறகுச் சுள்ளி - அதனால் அவள் விளாசிக் கொண்டிருந்தாள்.

இராமசாமி குறுக்கே புகுந்தார். தாயின் பிடியிலிருந்து காளியை விடுவித்தார்.