பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

79


13. வாழ்வே மாயம்...

"சிந்திப்பீர்! சிந்திப்பதில் கெடுதியில்லை. சிந்திப்பதால் நீங்கள் பாவிகளாகிவிட மாட்டீர்கள்; சிந்தித்தால் தான் உங்கள் இழிவினுடைய துன்பத்தினுடைய அஸ்திவாரம், ஆணிவேர் எங்கிருக்கின்றது என்று உங்களுக்குப் புரியும்."

- தந்தை பெரியார்

வாழ்க்கையில் ஒருவருக்கு நல்ல மனைவி அமைவதற்கும்; நல்ல மனைவிக்கு அன்பான கணவன் கிடைப்பதற்கும் பாக்கியம் செய்ய வேண்டும் என்பார்கள்.

அந்த வகையில் நாகம்மை இராமசாமி இருவருமே அதிர்ஷ்டசாலிகள்தான்.

இளம் வயதிலிருந்தே இருவரும் ஒன்றாய்ப் பழகி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வளர்ந்தவர்கள். இத்தகையவர்களைத் திருமணத்தின்போது பெற்றோர்கள் பிரித்து தங்கள் குழந்தைகளுக்கு வேறு வரன் தேடி முடிக்க எண்ணினார்கள்.

ஆனால் நாகம்மையோ -

மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்? என்று உறுதியாகப் பெற்றோரிடம் கூறிவிட்டார்.

ஒரு பெண் ஒருவரை விரும்புவது பெரிதல்ல. ஆனால் திருமணத்தின்போது அதற்கு எதிர்ப்பு வந்ததும், 'நான் விரும்பியவரைத்தான் மணந்து கொள்வேன்' என்று போராடி -