பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

7



பெரிய இடத்துப்பிள்ளை போல் தோற்றம். இராமசாமியின் செய்கையால் காளியின் தாயார் பயந்து நடுங்கினாள்.

விறகுக்கட்டையை வீசினாள்-மகனைப் பார்த்து யார் இவர்? என்பது போல் விழியால் விசாரித்தாள்.

தன் நண்பன் இவ்வாறு வருவான் என எதிர்பாராத பிரமிப்போடு, காளி-தன்னுள் முகிழ்த்த மகிழ்ச்சியோடு “இவருதாம்மா -என்னோட சினேகிதரு-நம்ம அப்பாரு இவங்க பண்ணையிலேதாம்மா வேலை செய்யறாரு. சின்ன எசமான் ரொம்ப நல்லவரு அம்மா” என்கிறான். தாய் பதறிப் போனாள். “ஐயோ பெரிய நாயக்கரய்யா வீட்டுப் பிள்ளையா நீங்க? சின்ன எசமான்! நீங்க இந்தத் தெருவுக்குள்ளாறெ வரலாமா? என் மவன்கூடச் சேரலாமா?” என்று பயந்தபடி பதறினாள்.

“இதிலே என்னதப்பு? காளி என்னோட சினேகிதன். என்னோட பழகினதுக்கு இப்படி அடிக்கிறீங்க - அவன் மேல என்னதப்பு?” என்றார் இராமசாமி.

“நீங்க இங்கெல்லாம் வரக்கூடாது - என் புள்ள கிட்ட பழகக் கடாது. பெரிய எசமானுக்குத் தெரிஞ்சா கொன்னு போட்டுடுவாரு - நாங்க கீழ்சாதி” என்றாள்.

“நீங்க எல்லாம் கீழ்சாதி என்று யார் சொன்னாங்க? அதெல்லாம் சுத்தப் பொய் நம்பாதீங்க” என்றார் இராமசாமி.

“எசமான் அதை இந்த ஊரு உலகம் சொல்லுது. காலகாலமாய் தீண்டப்படாதவன்னு வாழற எங்கப் பொறப்பைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? வாதம்