பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈரோட்டை விட்டு கொள்ளை நோய் மறைந்ததும் மக்கள் மீண்டும் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.

ஊரே ஒன்று கூடி இராமசாமியின் அபார துணிச்சலையும் அயராத சேவையையும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தியது.

இதையெல்லாம் கேட்டு நாகம்மையாரும், வெங்கடப்பரும், சின்னத் தாயம்மையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இராமசாமியின் திறமை மீது அளவற்ற நம்பிக்கை கொண்ட வெங்கடப்பர் கடைத்தெருவில் தன் பெயருக்கிருந்த பெரிய மண்டிக் கடையை 'ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி,' என்று பெயர் மாற்றும் செய்து; முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு, ஒய்வெடுத்துக் கொண்டார். மக்கள் அவரை ஈ.வெ.ரா. என்று அன்போடு அழைத்தனர்.

பெரிய மண்டிக்கடை முதலாளி ஆகிவிட்டாலும் ஈ.வெ.ரா. பொது நலத்தொண்டை விடவில்லை.

பொறுப்புகளும் பதவிகளும் வலியத் தேடி வந்த வண்ணமிருந்தன.

ஈரோட்டை சுற்றியுள்ள ஆலயங்கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடவுளையும் ஆலய வழிபாடுகளையும் ஈ.வெ.ரா. தனிப்பட்ட முறையில் எதிர்ப்பவராக இருந்தாலும், பொதுப் பணியில் தன் கொள்கைகளை ஒதுக்கி வைத்தார்.

பல ஆலயங்களைப் புதுப்பித்து; திருப்பணிகளை மேற்கொண்டார். பக்தர் கொண்டாடும் ஆலய