பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii



இந்தச் சம்பவத்தைக் கேட்டபோது, அண்ணாவும் சம்பத்தும் வருந்தினர். ஆனால் கலைஞர் மகிழ்ந்தார். "நீங்கள் மட்டும் அய்யாவுக்கு நல்ல பிள்ளையா?" என்று சில காலமாக இவர் என்னைக் கலைத்து வந்தவர். இனி என் சார்பு இவர் பக்கம் முழுமையாக இருக்குமல்லவா? அதனால் இவருக்கு மகிழ்ச்சி!

இடைக் காலத்தில் நான் அய்யாவைச் சந்திக்காவிடினும், என் பிள்ளைகளை அனுப்பி வந்தேன். அய்யாவும் அம்மாவும் மகிழ்ச்சியோடு விசாரிப்பார்கள். "அப்பாவைப் போலவே இருக்கிறீர்களே? (அப்பாவியாக)" என்பாராம் அய்யா!

1967-க்குப் பிறகு அடிக்கடி சந்தித்தேன். "அண்ணா காவியம்" எழுதி முடித்த பிறகு, அய்யாவிடம் மதிப்புரை வாங்க விரும்பினேன். கையெழுத்துப் பிரதியைக் கொண்டு போய்க் கொடுத்து, என். எஸ். சம்பந்தம் அவர்களை நினைவூட்ட வேண்டினேன். 15-12-72 அன்றையத் தேதியிட்டு, அய்யா அவர்கள், பாராட்டுரை என்ற தலைப்பில், தம் கைப்பட மதிப்புரை எழுதித் தந்தார்கள். "அண்ணா காவியம்" நூலில் அதை அப்படியே பிளாக் செய்து அச்சிட்டுள்ளேன். அதில் ஒரு பகுதியில் அய்யா அவர்கள்...

[படம்]

என்று குறிப்பிடுகிறார்.