பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


177 கையாளர் இழி தன்மைக்கும் பலியாகாமல் எச்சரிக்கை யாய் நடந்துவர வேண்டுமென்றும் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறினார் பெரியார். w 姆 கழகத்துக்கு நிதி வசதியே இல்லாததால் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து உதவ வேண்டும் என்றும், அது சேரும் வரையில் கழகத் தோழர்கள் ஆங்காங்கு மாநாடு கூட்டி நிறையப் பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார். சூலைத் திங்கள் 31-ஆம் நாள் முதல் ஆகஸ்டுத் திங்கள் 8.ஆம் நாள் முடியப் பெரியார் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இதில் புதுமையாக விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது திருவாரூர் வி. எஸ். பி. யாகூப் என்னும் சிறந்த அமைப்புத் தொண்டரால். அதாவது, பெரியாருடன் நெடுஞ்செழியனும் வருவார்; ஒலி பெருக்கி அமைக்கப்பட்ட காரில் இருவரும் பயணம் செய்வார்கள் என்பதாக 1946-ல் இதுவும் ஒரு புதுமை! م பெரியார் குடும்பத்தில் இந்த ஆண்டு இரு திருமணங்கள் நடந்தன. அண்ணாரின் சிறிய மகள் செல்லா என்கிற நாகலட்சுமிக்கும், சேலம் தாதம்பட்டி ராஜாவுக்கும் 194-46 ல் திருமணம் நடைபெற்றது. ஈ. வெ. கி. சம்பத்திருப்பத்தூர் சாமி நாயுடு மகள் சுலோச்சனா இவர்கள் திரு மணம் 15-9-1946 அன்று திருப்பத்துரில் நடைபெற்றபோது பெரியார், பெண்கள் அலங்கார பொம்மைகளா-என்ற தலைப்பில், பெண்டிருக்கு உள்ள நகைப் பைத்தியம் முதலிய பழைமைக் கருத்துகளைச் சாடினார். (பெரியார் வலதுகை மோதிர விரலில் எப்போதும் அணிந்திருக்கும் பெரிய பச்சைக் கல் மோதிரத்தைக் குறும்புடன் பார்த்தனர் மண மகளார்) - திராவிட மக்களுக்குத் தனியான நெறியில்லை; ஆரிய மதம் ஆரியவேதம் ஆரியக்கலை இவைகளையே தமது நெறி யாகத் திராவிடர் தவறாகக் கருதுகின்றனர்; ஆதாரமே யில்லாத பாதக்கண்டம் அல்லது பாரத தேசம் தமது நாடு Gf|Gff బ్రొపోజా, யார் நம்மவர், யார் அந்நியர் ப.--12 -