பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கிடைத்தது, என்ற வரலாறு இதற்கு உரிய மிகச் சரியான எடுத்துக் காட்டாகும்! தண்டமிழ் இனத் தார். சும் பண்டைப் பெருமையெல் லாம் மறத் தும் துறந்தும், நிரந்தரமாய் அடிமைப்பட்டுச் சுதந்திரத்தைப் பெறவும் முனையமாட்டார்களோ என்ற மிகப் பெரிய வினாக்குறியாய் வெடித்தெழுந்து தமிழர் நிலை அறைகூவல் எழுப்பிக் கொண்டிருந்த பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான்-தமிழகத்தின் எழுஞாயிறாய், இருள் துடைக்க அருள் சுரந்து, பிறந்தார் நம் தந்தை பெரியார்! பழந்தமிழ் மக்களால் கொங்கு நாடு என்று அழைக்கப் பட்டுத் தமிழகத்தின் மேற்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்துள்ள நாட்டின் ஒருபகுதியே இன்றையக் கோயமுத்துார் மாவட்டம். அங்குள்ள ஈரோடு பெருநகரம் வணிகச் சிறப்புடையதாகும். பெரிய தொடர் வண்டிச் சந்திப்பும் ஆகும். வீட்டில் கன்னட மொழி பேசும் பலிஜ நாயக்கர் வகுப்பினைச் சார்ந்த வெங்கட்ட நாயக்கர், தம் மனைவி சின்னத்தாயம்மாளுடன், அன்றாடம் கூலி வேலை செய்து, பிழைப்பினை நடத்தி வந்தார். உழைப்பின் மேன்மையினை உணர்ந்திருந்த காரணத்தால், பின்னர், வண்டி, மாடுகள் வாங்கி, அவற்றின் வாயிலாக வருவாய்ப் பெருக்கம் தேடினார். நாள்தோறும், ஒய்வின்றி, அரிதின் முயன்று, தம் மனையாளின் அருந்துணையுடன், சிறு மளிகைக் கடை ஒன்றினை வண்டிப்பேட்டையில் துவக்கிய வெங்கட்ட நாயக்கர், தமது நாணயத்தாலும் நாதயத் தாலும், பெரும் மண்டிக் கடையின் உரிமையாளராக, விரை வில் மாறினார். பொருட்களை மொத்தமாகக் கொள் முதலும் விற்பனையும் செய்வதில் ஈடுபட்டு மிகத் தேர்ந்த வணிகரானார். ஈரோட்டில் நாயக்கர் என்றால் அவர் தாம்; நாயக்கர் மண்டி என்றால் வெங்கட்ட நாயக்கரின் மண்டிக் கடைதான்; நாயக்கம்மாள் என்றால் சின்னத் தாயம்மாள்தான் என்று நாடெங்கும் அறிமுகம் கிடைத்தது, கூலிக்காரராய் வாழ்வு தொடங்கிய நாயக்கர்