பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ 1 பரம பாகவதரும் உத்தம வைணவ பக்த சிரோமணியு மான வெங்கட்ட நாயக்கரின் இளைய பிள்ளை, பள்ளியில் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தினார். இவர் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமானால் கூட, உயர் வகுப்பினரான கி.பாத்தியாயர் வீட்டில் மட்டுமே அருந்திடவேண்டும் என்பது பெற்றோர் உத்தரவு! இதை அன்றாடம் பள்ளிக்குப் புறப்படும் போதெல்லாம், பிள்ளைக்கு நினை ஆட்டுவது அன்னையாரின் வாடிக்கை, அதனால் அந்த ஆணையைக் கடைப்பிடிக்கக் கருதிய மகனார், பள்ளி ஆசிரியராகிய சைவ ஓதுவார் வகுப்பைச் சார்ந்தவருடைய வீட்டில் தண்ணீர் அருந்தச் செல்வார். இவரை எச்சில் படாமல் குவளையைத் துக்கிக் குடிக்கச் சொல்வார்கள். தண்ணீர் அருந்திய பாத்திரத்தைக், கீழே கவிழ்த்து வைக்கச் சொல்லித், தண்ணீர் தெளித்துப், புனிதப்படுத்தி, உள்ளே எடுத்துக் கொள்வார்கள். சிலநேரங்களில் இவருக்குத் தண்ணீர் தரவும், தயங்குவார்கள்! இளம் உள்ளத்தில் இந்த உயர்சாதி மனப்பான்மையைப் பற்றி இராமசாமி நன்றாகப் பதித்துக்கொண்டார். பின்னர், ஆசிரியரிடம்கூட உண்மையை வெளியிடாமல், தண்ணீர் குடிக்க வெளியில் செல்லும் போதெல்லாம், தனக்கு விருப் பத்துடன் தர இசைகின்ற பிறசாதியினர் வீடுகளை நாடினார். வானியச் செட்டியார், இஸ்லாமியர், முறங் கூடை பின்னுவோர் இவர்கள் வீடுகளில் நாயக்கர் வீட்டுப் பிள்ளைக்குத் தண்ணீர் தந்தனர். தடையில்லை, தயக்க மில்லை. இராமசாமியின் பெற்றோர் அறிந்தால் வெறுப் பார்களே என்று அவர்கள் அஞ்சியபோது, இராமசாமியோ அச்சம் தேவையில்லை என்றார். நாட்கள் செல்லச் செல்ல இராமசாமியின் செயல் இந்தத் துறையில் தீவிரமடைந்தது. தண்ணிரில் தொடங்கியவர், தின்பண்டங்கள் அருந்துவது வரையில் துணிந்து சென்று விட்டார். இவர்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் அதிகம் நெருங்கிப் பழகவும் தொடங் கினார் இராமசாமி.