பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வளரத் துவங்கின. மிகத்தேர்ந்த வணிகராக மாறிவந்தனர் நமது ஈ. வெ. இராமசாமி! வணிகராயினும், பிறவிக் குறும்பு குறைவாகிப் போகுமா? வைணவ மதவாதிகளின் புகலிடமாக அப்போ தெல்லாம் வள்ளல் வெங்கட்ட நாயக்கரின் இல்லம் இலங் கியதே! வருவார் போவார் ஏராளம். சாதுக்கள், சந்நியா சிகள், பாகவதர்கள், பக்திமான்கள், வித்வான்கள், பண்டிதர் கள், சமயப் பிரச்சாரகர்கள்-இப்படி எந்த நேரத்திலும் வீடே அமர்க்களமாக விளங்கும். சைவ வைணவப் புராண இதிகாசக் கதா காலட்சேபங்கள் அடிக்கடி நிகழும். இராமசாமிக்கு இவற்றைக் கேட்பதில் தனியானதொரு நாட்டம் பிறந்தது. தாமே படித் து அறியவில்லை எனினும் இராமாயணம், பாரதம், பாகவதம், மற்றும் புராணங்கள் இவற்றையெல்லாம் கேட்டறிந்தே தமது அறிவினைக் கூர்மையாக்கிக் கொண்டனர். சமயக்கருத் துகள், சாத்திர சரித்திர தர்க்க வாதங்கள் யாவும் கேள்வி ஞானத் தினாலேயே உணர்ந்தார். இவற்றை அதிகமாகக் கேட்கக் கேட்க, அவருள்ளே எதிரிடையான பயன் உருவாகத் தொடங்கிற்று. தர்க்கத்திறன் வளர்ந்தது. ஏன்? எதற்காக? எப்படி?என்ற கேள்விகளை எழுப்பும். முனைப்பு பெருகிற்று. வாதம் புரியவேண்டும் என்று வேணவா எழந்தது. ஆதரவாளரின் அருமருந்தன்ன செல்வன், தம்மிடம் விதண்டாவாதம் பேசும்போது, பண்டிதர்கள் கோபித்துக் கொள்ள முடிய தே! அவர் கேள்விக்கு ஏற்ற பதிலைத் தந்தி. அவர்களிடம் சரக்கு ஏ து? தடுமாற்றம், தாறு மாறாகப் பி ஆற்றல், மாறுபடக் கூறல் இவைதாம் பதில் களாகக் கிடைத் து வந்தன. இராமசாமி க்கு. விளையாட்டா கவும் பொழு துபோக்காகவும் தொடங்கிய இந்த வேலை யினால், நாளடைவில் இராமசாமிக்குக் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின்மீது நம்பிக்கையில்லாமலே போய் விட்டது! நூல்களைப் பயிலாமலே கேள்வித்திறனால் கண் டாரைக் கதிகலங்கவைத்த இராமசாமி, அந்த இளம்பிரா