பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஈ.வெ.ரா. எப்படி எடுத்துக் காட்டுகிறார்:-"முன்பு எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி. சுமார் 100, 150 ரூபாய் இன்கம் டாக்ஸ் கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் 1 ரூபாய் 15 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் முனிசிபல் பில் கலெக்டர்பார்ப்பனன்-வரிவிதிப்பு விஷயமாக ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்துப் பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து 'ராவால ராவால தேவுடா (வரவேணும் வரவேணும் ஸ்வாமி): என்று இருகை கூப்பிக் கும்பிட்டு, உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டேயிருப்பார். அப்பார்ப்பன பில் கலெக்டர் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு ஏமிரா வெங்கட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி குசே தானிக்கி (ஏண்டா வெங்கட்ட நாயுடு அந்த வீட்டைப் பார்க்கப் போகலாமா?) என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ஆஹா என்று சொல்லி அங்கவஸ்திரத்தைத் தலையில் கட்டிக்கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு słGeufrfi. ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தவுடன், மஞ்சள் மிளகாய் கருப்பட்டி வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி ஒரு பையனிடம் கொடுத்து, சுவாமிகள் வீட்டில் கொடுத்துவிட்டு வா என்று சொல்லி, அவனை வழி அனுப்புவார். இதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கில் குமஸ்தா பார்ப்பான் நாயிலுங் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும்.” சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு, பார்ப்பனர்கள் நிலையும் உணர்ச்சியும் எப்படி இருந்தன? இப்போது எவ் வளவு மாற்றமடைந்துள்ளன என்பதை உணர்ந்தவர்களுக்கு இது நன்கு புரியுமே! -