பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தம்பதிகள், ஒன்றிய மனத்துடன் நன்ருக வாழ்ந்து காட்டி, வரலாறு செதுக்கினர். மாணாக்கராயிருந்து அய்ந்தாண்டுகளை வீணாக்கிய போது, இராமசாமியின் பிள்ளை விளையாட்டுகள் பெரும் தொல்லையாயிருந்து வந்தன பெற்றோர்க்கு. ஒரளவு திசை திருப்பமாயிருக்கட்டும் என்று கருதியே திருமணவாழ்வில் ஈடுபடுத்தினர். தமக்கு முழுவிருப்பமற்ற பெண்ணை மகன் பிடிவாதமாக மணந்ததால் தமது வெறுப்பைக் காட்டிட வெங்கட்ட நாயக்கர், திருமணத்தன்று, உணவுக் கூடத்தி லேயே இருந்தனராம். அய்ரோப்பிய விருந்தினர் மணம் விசாரிக்க வந்தபோது மட்டும் வெளியே வந்தாராம். நாளடைவில் நாகம்மையாரிடம் மிகுந்த பாசம் கொண் டிருந்தாராம். பால்யக் குறும்புகள் வாலியப் பருவத்தில் மறைந்தா போய்விடும் ? பெற்றோரின் வைதிக சனாதனப் போக்குப் பிடிக்காமல் எதிரிடையாய் நடைபோட்டு வந்த இராமசாமி, அதேபோலத் தன் மனையாளும் தன்னையே பின்பற்றி வரவேண்டுமென விரும்பியது தவறல்லவே! மாமனார் மாமியார் வ்ைணவ சம்பிரதாயங்களில் மூழ்கி ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள். தம் மருமகளுக்கும் ஆச்சார முறைகளை அவ்வாறே புகட்டிவிட்டனர். நோன்புகள் விரதங்கள் சடங்குகள் பூசை புனஸ்காரங்கள் அனைத்தும் கற்பித்துத் தந்தனர். இராமசாமியின் அநாச் சாரப் பழக்க வழக்கங்களால் பெற்றோர் அவரைத் தொடக் கூட மாட்டார்கள். வேண்டுமென்றே அவர் தமது தாயா ரைத் தீண்டினால், தீட்டாகிவிட்டது என்று திட்டிக் கொண்டே அவர் மறுபடியும் ஸ்நானம் செய்வார். இதே பாடத்தை நாகம்மையாருக்கும் போதித்தார்கள். முடியுமா? இராமசாமி தம் மனையாட்டியைத் தம் வழிக்குக் கொணரப் பல முறைகளைக் கையாண்டார். நாகம்மையார் மூத்தோர் ஆணைப்படி மரக்கறி,உண்பவர். அவர் தலை முழுகி விரதம் அனுஷ்டிக்கும் நாளில், தனக்குக் கட்டாயம் புலால் உணவு தேவையெனக் கணவர் அடம் பிடிப்பார். கொண்டான் குறிப்பறியும் பெண்டாட்டியோ, மாறாக