பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 போது, தாலி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ? குடியா முழுகிவிடும் ? என்றார். இனி என்ன? இராம சாமிக்கு இதிலும் வெற்றி ! துவக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழி முறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார், அவை யெல்லாம் கம் கணவருக்குப் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து, தாமே திருத்திக்கொண்டார். சமுதாயக் கொள்கைகளில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடைபோட் டார். விருந்தோம்பலில் அவர்க்கு நிகரானவர் எவருமிலர். பிற்காலங்களில் தமது கணவர் நாட்டுத் தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்துத் தலைமைப் பொறுப்பேற்ற காலை, பெரிய சத்திரம் போல் விளங்கிய அவர் வீட்டில் வந்து தங்கி அன்னையாரின் அறுசுவை உண்டிகளை அருந்தி மகிழாதார் இல்லை! இந்தியாவிலேயே, முதன்முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறைவாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவர். கஸ்தூரிபாகாந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது! புறநானூற்று வீரத் தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப் பெறும் அத்தனை உயர்பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமாயினும், கணவர் வழிநின்று கற்றுக் கொண்டது ஏராளம் ! கணவர் இராமசாமி சிக்கனத்துக்கே இலக்கணம் வகுத்தவர். நிறைய நண்பர்களும் தொண்டர்களும் வீட்டுக்கு உணவருந்த வரும்போதெல்லாம், ஏன் இவ்வளவு வகையான உண்டிகள், கறிகள் என்று நாகம்மையாரிடம் கடிந்துகொள் வார். அந்நேரங்களில் அவருக்கு மட்டும். சோறும் மோரும் சிக்கனமாய்ப் பரிமாறிவிட்டு, உழைத்து வர் சுற்றி, மக்கள் தொண்டாற்றும் மகன்களுக்கு விருந்துணவு படைப்பது அன்னையாரின் வாடிக்கை. மிகப்பெரிய கூடம் நிறைய இலை களைப்போட்டுவிட்டுத்தான், வந்த விருந்தினரின் தலைகளை எண்ணுவார் அம்மையார்.