பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மஞ்சள் மண்டி வணிகம். முதல் மனைவி கண்ணம் மாளுக்குக் குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி பொன்னம்மாள் மூலம்ாக ராஜாத்தி என்கிற சுப்புலட்சுமி, காந்தி, சரோஜினி ஆகிய மூன்று பெண் மக்கள். சந்தானம், சாமி இரு ஆண்மக்கள். இவர் களைக் கண்ணம்மாளின் மக்கள் என்றே அனைவரும் கருதுவர். எஸ். இராமசாமி நாயக்கர் 1951 ஆகஸ்ட் 5ஆம் நாளும் எஸ். ஆர். கண்ண்ம்மாள் 1971 பிப்ரவரி 23 ஆம் நாளும் மன்றந்தனர். இந்த இராமசாமி நாயக்கரின் மக்கள் எஸ். ஆர். சந்தானம், எஸ்.ஆர். சாமி ஆகியோர் இன்று ஈரோட்டில் பிரமுகர்கள். மாப்பிள்ளை நாய்க்கரின் மக்கள் என்று இவர்கள் அன்புடன் அழைக்கப்படுவார்கள். கண்ணம்மாளின் அ க் க | ள் பொன்னுத்தாய் அம்மாளை எஸ். இராமசாமி நாயக்கரின் அண்ணன், கல்யாணசுந்தர நாயக்கருக்கு மணம் முடிக்கப்பட்டது. இந்த அம்மாளுக்கு, அம்மாயி அம்மாள், அப்பய்யன் என இருமக்கள் பிறந்ததும், தமது 25 வயதிலேயே, இறந்து போனார். இந்த அம்மாயி அம்மாளுக்குப், பிற் காலத்தில் பெரியார் விதவைத்திருமணம் நடத்தித், தம் குடும்பத்தில் புரட்சி செய்தார். அம்மாயி, அய்யப்பன் இருவருமே இப்போது இல்லை. சென்னை வரையில் வருவதற்குத்தான் மற்ற நண்பர் களுக்குத் தென்பும் திராணியும் இருந்தது. சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருக்குங்கால், யாரோ ஈரோட்டுக் காரர். அவ்வழியே செல்லக்கண்ட மாப்பிள்ளை நாயக்கர், தங்களைத் தான் தேடச் சொல்லி மாமனார் வெங்கட்ட நாயக்கர் அவர்களை அனுப்பியிருப்பதாக அஞ்சி, இராம சாமியை விட்டு அகன்று, உடன் வந்த மற்றவர்களுடன் ஈரோட்டுக்கே திரும்பிவிட்டார். இராமசாமி துறவு மேற் கொண்டு, சென்னையை விட்டு எங்கோ வடக்கே சென்று விட்டதாகவும் ஊரில் அவர் கூறினார். கவுதம புத்தருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தையும் தோன்றிய பின்னர், இல்லறத்தில் பற்று நீங்கித் துறவறத் தில் ஆர்வம் பிறந்தது போல், இராமசாமியாருக்கு 25 வயது பிறந்த பின்னர் குடும். பாசம் குறைந்தது. உறுதியாகத்