பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 துறவு நிலை பூணுவது என்று முடிவு செய்து கொண்டு, சென்னையை விட்டுத் தனியே புறப்பட்டுப் போனார். ஆந்திரப் பகுதியிலுள்ள பெஜவாடாவை அடைந்தார். ஆங் கோர் சத்திரத்தில் தங்கியிருந்தார். இவரைப் போலவே ஏதோ மனக்குறையால், வீட்டாரிடம் வெறுப்புற்ற இருவர், இவருக்கு அங்கே உற்ற துணைவராயினர். ஒருவர், தஞ்சா வூரைச் சார்ந்த வடமொழிப் புலமை வாய்ந்த வெங்கட் ரமண அய்யர். இன்னொருவர், கோயமுத்துரைச் சார்ந்த . கிராம அதிகாரி கணபதி அய்யர். இந்த மூன்று இல்லற சந்நியாசிகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டு பெஜவாடாவை விட்டு, நிஜாம் மன்னரின் தலை நகரமான அய்தராபாத் போய்ச் சேர்ந்தார்கள். அங்கேயும் ஒரு சத்திரத்தில் தங்கிக்கொண்டு, காலையில் வெளியே கிளம்பி, உஞ்சவிருத்தி செய்து, கிடைக்கும் அரிசியை உணவாகத் தாமே சமைத்து உண்டு, சத்திரத்துத் திண்ணை யில் அமர்ந்து தத்துவ விசாரணையில் ஈடுபடுவார்கள். அய்யர்கள் இருவரும் புராண இதிகாசக் கருத்துகளை எடுத்துப் பேச, இராமசாமியார் தமது இயல்பான தர்க்க வாதத்திறமையால், அவர்களை மறுத்தும் எதிர்த்தும் பேச, வீதியில் போவோர் வருவோர் பெருங்கூட்டமாய்த் திரள்வர். - இராமசாமியாரின் அறிவுக் கூர்மை அனைவரையும் கவர்ந்தது. அதுவரை கேட்டிராத புதுமைக் கருத்துகள், புராணங்களையே பொய்யாக்கும் அளவுக்கு அவரால் விவாதிக்கப்படுவது கண்டு எல்லாரும் வியந்து பாராட்டினர். குறிப்பாகக் காஞ்சி முருகேசனார் என்ற அரசு அலுவலர் ஒருவர், இவர்களது விவாத மேடை முன், இரசிகராயிருந்து கவனித்து வந்ததில், இம் மூவர் மீதும் மிக்க அன்பு பூண்டு இவர்களைத் தம் இல்லத்திற்கே அழைத்தேகினார். வீட்டர சியார் வெளியூர் சென்றிருந்தமையால், தமக்கும் சேர்த்துச் சமைக்குமாறு பணித்தார். நால்வரும் உண்டபின், நல்ல உரைக்கோவை தொடங்கும். தொடர்ந்து நடக்கும்.