பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தனங்கள்-இவை யாவும் காசி நகர் மீதே வெறுப்பினை உண்டாக்கிவிட்டன. இராமசாமி, அங்கிருந்து வேற்றுார் செல்ல விழைந்தார்! செப்பாலடித்த சிறு காசும் கைவசமில்லை; அப்பால் செல்வது எப்படியோ எனச் சிந்தித்த வண்ணம், இடுப்பில் கை வைத்த போது, என்றோ மறைத்து எடுத்து வந்திருந்த மோதிரம் தட்டுப்பட்டது. அதனை விற்றுப் பணமாக்கிக் கொண்டு கிளம்பினார். எதிர்ப்பட்ட ஊர்களில் சிற்சில நாள் தங்கிச், சுற்றிப் பார்த்துக் கொண்டே, ஆந்திராவைச் சார்ந்த ஏலூரு என்னும் ஊரை வந்தடைந்தார். முன்னர் ஈரோட்டில் அலுவல் பார்த்த சுப்பிரமணிய பிள்ளை என்பார், ஏலூரில் இருந்து வந்தது இராமசாமியின் நினை வில் நின்றபடியால், அன்னாரின் இல்லத்தைத் தேடிக் கண்டு பிடித்து, நள்ளிரவில் அங்கு போய்ச் சேர்ந்தார். கவுdன தாரியான சின்ன நாயக்கரை, அவர் அடையாளம் கண்டு கொள்ள அதிக நேரம் ஆயிற்று. குரல்தான் காட்டிக் கொடுத்தது; சான்று தந்தது. உள்ளம் நெகிழ்ந்த பிள்ளை அவர்கள், இராமசாமிக்கு வேட்டி சட்டை அணிவித்து, வேடத்தைக் களையச் செய்து, தம் இல்லத்திலேயே அன்புடன் இருத்திக் கொண்டார். இதற்கிடையில், இராம சாமியைக் காணாத பெற்றோர் என்ன பாடுபட்டனர்? எண்ணற்ற பொருட் செலவு; எங்கெங்கோ தேடி வர ஆள் செலவு; தந்திகள் .கடிதங்கள் பறந்த வண்ணம் இருந்தன! நாயக்கர் குடும்பத்தில் இப்படியொரு நலிவா? வெங்கட்ட நாயக்கரும் கிருஷ்ணசாமியும் வெகு தூரம் தேடி நொந்து, அந்தோ இளவலை இழந்தோம் என வருந்தி வாடினர். இராமசாமிக்கு எல்லாவற்றிலும் நெருங்கிய நண்பரானபொறியாளரும் தமிழறிஞருமான-பா. வே. மாணிக்க நாய கரும் பல் வகையானும் தேடி அலைந்தார். சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிறந்த பா.வே. மாணிக்க நாயகர், 12 வயதில் பள்ளி சென்று, 25 வயதில் பி. இ. தேர்ந்து, மேற்பார்வைப் பொறியாளர் வரை உயர்ந்தவர். மேட்டுர் அணை இவர் திட்ட