உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 முதல் 7 மணி வரை, முதல் நாள் 8 பேர் கைதாகிப் பின்னர் விடுதலை,செய்யப்பட்டனர். 9.10.50 சேலம் சென்ற பெரியாரைப், புரட்சித் தலைவர் பெரியார் வருகை என வர்ணித்து வரவேற்றனர், சேலம் திராவிடர் கழகத்தினர்! வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சி தமிழ் நாடெங் கணும் கொழுந்து விட்டு எரிந்தது. ஆங்காங்கு உள்ள பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்ற எழுத்துகள் அழிக் கப்பட்டன. ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகள் தார்கொண்டு மறைக்கப்பட்டன. இவற்றை யார் செய்தார்கள் என எவர்க்குந் தெரியாது. அரசுக்கும் புரியாததால், அடக்குமுறை கோர தாண்டவமாடியது. அதனால், பெரியார் பொறுப்புடன் தாமே முன் வந்து, கழகத் தோழர்கள் இம்மாதிரி இரகசிய வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். எனினும், யார் செய்தாலும், இப்படி இரகசிய அழிப்பு வேண்டாம், என்று அறிக்கை விடுத்தார், 17.10-50 விடுதலை’ நாளேடு வாயிலாக 24-10-50 அன்று சென்னைக்கு வருகை தந்த டெல்லி அமைச்சர் இராஜ கோபாலாச்சாரியாருக்கு எதிர்ப்பாக தி.மு.க. பெரிய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் போன்றோர் அடித்து உருட்டப்பட்டனர். மக்கள் குழுமியுள்ள இடங்களிலெல் லாம் போலீசார் புகுந்து தடியடி நடத்தினர். அநாவசியத் தலையீட்டைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் ஒன்று நடை பெற்றது. 25-ம் நாள் சென்னையில் நடந்த மத்திய திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், நவம்பர் 1-ஆம் நாள் எல்லா ஊர்களிலும் வடநாட்டார் துணிக்கடை முன் மறியல் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. பெரியார் கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக லட்சக் கணக்கான கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். கைத்தடியை ஊன்றிக் கொண்டோ, இல்லாமலோ, ஒலி பெருக்கி முன்னாலோ, இல்லாமலோ - நின்றவாறேதான். இதுவரை பேசியிருக்கிறார். 1950 அக்டோபர் 21-ஆம் நாளன்று செம்பனார்கோவில் பொதுக் கூட்டத்தில்தான்