218 ருக்கு வாக்களிக்க வேண்டாம். காங்கிரசுக்கோ ஒருபிடி மண்ணைப் போடுங்கள்-என்று கடுமையாகப் பேசி வந்தார். பெரியார். ஜூல்ையில் தி.க. மாகாண மாநாடு நடை. பெற்றது. - - சேலத்தில் 22-7-51ல் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில்,பெரியார் திராவிடநாடு பிரிவினை ஏன் அவசியம் என விளக்கினார்:-வெள்ளைக்காரன் இன்னும் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலை இங்கேயே விட்டு வைத்துச், சுரண்டிக் கொண்டிருக்கிறான். வடநாட்டான் கொள்ளையனாகவே மாறிச் சுரண்டுகிறான். இங்கேயிருந்து கொண்டே, பார்ப்பான் சுரண்டுகிறான். நாம் தனி நாடு கேட்டால், சிறிய நாடு; வாழ முடியுமா? என்கிறார்கள். பாக்கிஸ்தான் கேட்ட போதும், இப்படித்தான் சொன் னார்கள். நீயாகத் தருகிறாயா? நான் ரஷ்யாவை உதவிக் கழைத்து வாங்கிக்கொள்ளட்டுமா? என்று ஜின்னா கேட்ட தும் பணிந்தார்கள். நமக்கு அத்தகைய மான உணர்ச்சி. வேண்டும்-என்றார்.பெரியார். - - அரசியல் சட்டம் நியாயமாகச் செய்யப்படவில்லை. அம்பேத்கார் தவிர, டி.டி.கே., அல்லாடி, திருமல்ராவ், ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லிம்-இருந்தார்கள். நமக்காக யார்? எனவே, சட்டப்படியோ, காங்கிரசார் தந்த வாக்குறுதிப் படியோ, அரசியல் சட்டம் இயற்றப்படவில்லை. அதை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்காக, வரும் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும்-என்பதாகத் திருச்சி யில் 11.9-51-ல் பெரியார் பேசினார். சமுதாயத்துறையில் வேலை செய்ய வேண்டுமானால் ஆட்சிக்குப் போய்ப் பயனில்லை. அதனால்தான் நாங்கள். ஒதுங்கி நிற்கிறோம். காந்தியார் கூடத் துவக்கத்தில் அப் படித்தான் கூறி வந்தார். பின்னர் அவரே மாறியதால்தான், அரசியல் நமக்கு வேண்ட்ாமென, நான் காங்கிரசை விட்டு விலகினேன்-என்றெல்லாம் பாண்டமங்கலத்தில் பெரியார் தமது கருத்தைத் தெரிவித்தார். ராஜாஜி இப்போது தமது மத்திய மந்திரி பதவியை விட்டுவிட்டு வந்திருந்தார். இது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/244
தோற்றம்