உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 ஸ்தாபனத்தின் உறுப்பினர் 1949 முதல் இன்றுவரை. 'விடுதலை’ மேனேஜர் 1-11-1970 முதல் இன்றுவரை. ஆனால் தன் பெயரை வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியாரின் நிழலாக எப்போதும் உடனிருந்தவர். முக்கியமாகப் பெரியார், மருத்துவ மனைகளில் உடல் நலிவுற்றிருக்கும் போது, இவர் கட்டாயம் அங்கிருப் பார். - - - பெரியாரைப் புரிந்து கொண்டவர்கள் இரண்டு வகையினர். பேச்சையும் எழுத்தையும் பார்த்துக் கேட்டுப் படித்துப் புரிந்து கொள்பவர் பலர். ஆனால் அவரது ஒவ்வோர் அங்க அசைவு அல்லது முக்கல் முனகல் போன்றவைகளுக்கும் பார்வைக்கும் பொருள் புரிந்து செயல்படுவோர் மிகமிகச் சிலர்; அந்த சிலரிலும் சிறப்பானவர் இந்தச் சம்பந்தம். அற்புதமான நினைவாற்றல் இவரது தனித்திறன். பெரியார் சம்பந்தப்பட்ட கழகக் காரியங்களில் இவரறியாதது ஏதுமில்லை. இன்றைக்கும் உட்கார்ந்த இடத்தி லிருந்தே பல காரியங்களை இயக்கி வருகின்ற சூத்திர தாரி இவரென்பதை நெருங்கிப் பழகிய சிலர் நன்கறி வார்கள். அதனால் வேறுவகையில் பாதிக்கப்பட்ட சிலருக்கு இவரைக் கண்டால் வெறுப்பு ! நான்கு பெண்மக்களுக்குத் தந்தை. விபத்தில் இடுப்பில் ஏற்பட்ட ஊனம், அதிகம் நடமாடமுடியாத நிலை, எனினும் ஊக்கம் குறைவதில்லை. நண்பர்களும் நல்லுரை நாடுவோரும் ஏராளம். சுற்றம் பெரிதும் கற்றறிந்தார் கூட்டமே!. - பெரியார் தொண்டராக மட்டுமில்லாமல், மணி யம்மையாருடைய காலத்திலும், இளையவரான வீரமணி காலத்திலும் தனது பணிகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்து வருகின்றார். - இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, இனித் திரா விடர் கழகம் இயங்காது,என விஷமிகள் பிரச்சாரம் செய்தன ராம். இதற்குப்பெரியார் அரியதோர். உதாரணம் கூறினார்; "துணியில் ஒன்று நீட்ட நூல்; மற்றொன்று குறுக்குநூல்; இரண்டுமிருந்தால்தான் துணியென்று பேர். நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் சேர்ந்து பெற்ற குழந்தைதான்.