உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திராவிடர் கழகம். இறுதி இலட்சியத்தில் சுயமரியாதை இயக்கத்துக்கும், திராவிடர் கழகத்துக்கும் எந்தவிதமான மாறுதலும் கிடையாது. சுயமரியாதைக் கொள்கைகளைக் கொண்டிராத தனித்திராவிட ஆட்சியைச் சுயமரியாதைக் காரர்கள் ஏற்க மாட்டார்கள். வைதிகத்திலும் மூடநம்பிக் கையிலும் மூழ்கிய தனித்திராவிட ஆட்சியைத் திராவிட்ர் கழகத்தார் விரும்பமாட்டார்கள். . திராவிடநாடு கிடைத்தபிறகு திராவிடர் கழகம் கலைக் கப்படும் அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம்; ஆனால் கடைசி மூடநம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கத்துக்கு வேலை இருக்கிறது: சுயமரியாதை இயக்கம் அரசியல் நாற்றம் இல்லாதது. சர்க்கார் ஊழியர் உள்ளிட்ட எவரும் இதில் கலந்து கொள்ள லாம். இது திராவிடர் கழகத்துக்கு உற்ற துணையாக இருந்துவரும். இதிலுள்ள உறுப்பினர் யாவரும் திராவிடர் கழகத்திலும் உறுப்பினராயிருக்க வேண்டுமென்ற கட்டாய மில்லை. - சுயமரியாதைக் கொள்கைகளைப் பிடிக்காத சிலர் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்தார்களே தவிரத், திராவிடர் கழகத் தில் கடந்த 10 ஆண்டுகளாக இருப்பவர்கள், சுயமரியாதைக் கொள்கைகளை அலட்சியப்படுத்தாததால்தான், சுயமரி யாதைக் கொள்கைப் பிரச்சாரத்தைத் திராவிடர் கழக மேடைகளிலேயே செய்து வந்தார்கள்' என்றார். பெரியாரின் அரிய இந்த விளக்கத்துக்குப் பிறகு, விஷமிகள் வாயடைத்துப் போயிற்று. 1953-ஆம் ஆண்டுத் துவக்கத்தில், பெரியாருக்குச் சிறிது உடல் நலமில்லை. எல்லாம் இரண்டொருநாள்தான். ச்ென்னை பெரம்பூரில், 1953-சனவரி இரண்டாம் நாள், தென்பகுதி ரயில்வே மென் யூனியனைத் தொடங்கிவைத்தார். எஸ். ராகவானந்தம், வி. வீராசாமி,என்.ஜீவரத்தினம் உடன் கலந்துகொண்டனர். ஆந்திரமாகாணம் சென்னையிலிருந்து பிரிந்து போகும் சூழ். நில்ை உருவாகிவிட்டது. சென்னை மாநகரம் யாருக்கு