உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 ஈரோட்டிலிருந்த சில பழைய கட்டடங்களை விற்று விட்டுப், புதிதாக ஒன்று நகரமன்றமாக (Town Hall) அமைக்க விரும் பிப், பெரியார், சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் அறிவிப்புத் தந்திருந்தார். - 1952-ல் கொல்லை வழியாக ஆட்சிக்கு வந்த இராச கோபாலாச்சாரியார், தமது வழக்கமான, சூத்திரர் கல்வி வளர்ச்சியில் கைவைக்கும் வேலையை, ஆரம்பித்தார். 6000 கிராமப்புறப் பள்ளிக்கூடங்களை மூடுமாறு ஆணையிட்டார். மீதமிருந்த பள்ளிகளிலும், பாதி நேரம் படிப்பு மீதிநேரம் பிள்ளைகள் அவரவர் அப்பன் தொழிலைச் செய்ய, அதை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தமிழகத்திலுள்ள தமிழர் அனைவரும் கட்சி வேறுபாடு மறந்து, இதனைக் கண்டித்தனர். காமராசரே எதிர்த்தார். காங்கிரசிலிருந்த தமிழர்களும், பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் எதிர்த்தன. குல்லுகபட்டரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நாடே கொதித்துக் குமுறிக் கிளர்ந் தெழுந்தது. ஆச்சாரியார் மூர்க்கத்தனமாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஈ. வெ. கி. சம்பத் தலைமை யில் குலக்கல்வி எதிர்ப்பு முனையை உருவாக்கிற்று. சட்ட மன்றம் நடந்த 15 நாளும் சென்னையில் அறப்போர் மறியலை நடத்திற்று. வருணாசிரம முறையை ஜனநாயகத்தின் பேரால் நிலைநாட்ட முனைகிறார் ஆச்சாரியார். இதோ, கடைசிச் சிகிச்சையாக 27-5.53 அன்று கணப்தி உருவப் பொம்மையை மாலை 6.30 மணிக்குத் தூள் தூளாக்கி மண்ணோடு மண்ணாய்க் கலக்கிவிடுங்கள். புத்தர் விழாக் கொண்டாடிப் பிள்ளையாரைச் சரியாக உடையுங்கள். ஆச்சாரியாரே மாறிவிடுவார்-என்று பெரியார் தம்முடைய போர்ப் பிர கடனத்தை அறிவித்தார். பெரியார் திருச்சியில் பிள்ளை யாரைத் தாமே உடைப்பதாக முடிவெடுத்தார். இதற்குள் பெரியர்ருக்குக் கொடும்பாவி கொளுத்திடவும், அவர் உருவத்தை உடைக்கவும் சில மாற்றார் முயன்றபோது,